உறவுகள் மீது உள்ள வெறுப்பு காரணமாக தனிமையாக எல்லாவற்றையும் துறந்து ராணுவத்தில் சேரும் ஒருவன், காதல் மற்றும் ஆசிரியரின் படிப்பினையால் வாழ்க்கையின் ல் மீது ஒரு பிடிப்பு பெறுவதே அன் ஆபிஸர் அண்டு த ஜென்டில் மேன் கதை சுருக்கம்.
சாக்கின் உயிர் நண்பனான சிட்டிடம், லினேட் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி ஏமாற்றுகிறால். அவளைக் காதலிக்கும் சிட், அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் நிர்வாணமாக தற்கொலை செய்து கொள்கிறான். பயிற்சி முடிய ஒரு வாரமே எஞ்சிய நிலையில் தன் நண்பன் இல்லாத இடத்தில் தானும் இருக்கப் போவதில்லை. எனக்கு பயிற்சியிலிருந்து விலகல் தாரூங்கள் என ஃபோலியிடம் கேட்கிறான்.
ஃபோலி, '' வா ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வோம். ஜெயித்தால் நீ சென்றுவிடு''என்கிறார். சண்டையில் சாக் தோற்றுவிடுகிறான்.ஃபோலி ''இனி இருப்பதும் இங்கிருந்து போய்விடுவதும் உன் இஷ்டம்'' எனக் கூறிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
யில் ஃபோலியிடம் முதல் மரியாதை வாங்கும் போது நீங்கள் இல்லையென்றால் இது முடிந்திருக்காது என்று சாக் விடைபெறும் காட்சி நெகிழ்ச்சியானது. ஆனால் அவரோ அடுத்து பயிற்சிக்கு வந்திருக்கும் மாணவர்களிடம் கண்டிப்புடன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார்.
சேருவார்களா, மாட்டார்களா என்று நினைத்த சடாக், பவ்லோ கடைசியில் இணைவதோடு படம் நிறைவடைகிறது.
இந்தப் படத்தில் அனைத்து கதா பாத்திரங்களும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக சார்ஜெண்ட் ஃபோலியாக வரும் லூயீஸ் கார்லெட் ஜூனியர் சரியான தந்தை அமையாத அவர் ஒரு நல்ல தந்தையாக வழிப்படுத்துகிறார். இந்த படத்துக்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதும் பெற்றார்.
நடிப்பை தவிர்தது இந்தப் படத்தில் சிறந்து விளங்குவது இசையும் திரைக்கதையும். திரைக்கதையில் கவிதையாக பல காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக சாக் தான் செல்ல ஒரு இடமும் என பயிற்சியில் இருந்து விலக மறுப்பது பெண்களின் மீது பற்றில்லாமல் இருக்கும் சாக் கடைசியில் ப்வலோவை கரம் பிடிப்பது, அடுத்து வரும் மாணவர்களை சார்ஜெண்ட் ஃபோலி தங்களிடம் கேட்ட அதே கேள்வியை கேட்பது, தற்கொலை செய்து கொண்ட நண்பனைப் பார்த்து சாக் அழுவது எல்லாம் மிக இயல்பாகவும் அதே நேரத்தில் இதயத்தை தொடுமாறும் இருக்கும்.
1982-ல் வெளிவந்து அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் இதுவும் ஒன்று. தன்னிலை தேடல் பற்றிய சிறந்த படம்.
ஒரு ஆசிரியரின் கடமை மாணவனை நற்பண்புகளுடையவனாக மாற்றுவதே என்ற கருத்தை இப் படம் ஆணித்தரமாக உரைக்கிறது.
-மாக்ஸிம்